கமல் குரலில் வெளியானது ‘விக்ரம்’ படத்தின் முதல் பாடல் | kamal lead vikram movie first single released

Trends

கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. 8 மாதங்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனைப்பொறுத்தவரை அவர் கடைசியாக 2018-ம் ஆண்டு விஸ்வரூபம்-2 படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அரசியலுக்கு திரும்பியவர், படத்தில் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். அதன்பின், தற்போது 4 ஆண்டுகள் கழித்து அவருடைய படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பெரும் படத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், அனிருத் இசையில், கமல்ஹாசன் பாடியுள்ள ‘பத்தல பத்தல’ என்ற முதல் பாடல் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமான ரசிகர்களால் கண்டுகளிக்கப்பட்டுள்ளது. படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/798563-kamal-lead-vikram-movie-first-single-released.html